என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் கிஷிடா ஆகியோர் இருநாட்டு உயர்மட்ட குழுவுடன் நேரடி ஆலோசனை
- டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
- கூட்டத்தில் மத்திய வெளி விவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கு கொண்டு உள்ளனர்.
ஜப்பானின் மேற்கு நகரமான ஹிரோஷிமாவில் வரும் மே மாதம் ஜி7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்நிலையில், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசு முறை பயணமாக இன்று இந்தியாவிற்கு வந்துள்ளார்.
டெல்லி விமான நிலையத்தில் அவருக்கு மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்பு அளித்தார்.
பின்னர், டெல்லியில் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜப்பான் பிரதமர் கிஷிடா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதன்பின், இந்திய பயணத்திற்கான வருகை பதிவேட்டிலும் கையெழுத்திட்டார்.
இந்த பயணம் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய கிஷிடா, "சர்வதேச சமூகத்தில் ஜப்பானும், இந்தியாவும் எந்த வகையில் பங்காற்ற வேண்டும் என்பது பற்றிய கேள்விக்கு பிரதமர் மோடியுடன் சேர்ந்து, ஒரு முழுமையான அளவிலான பார்வைகளை பரிமாறி கொள்ளும் பணியில் ஈடுபட ஆவலாக இருக்கிறேன்" என கூறினார்.
இந்நலையில், டெல்லியில் ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இருவரும், இரு நாடுகளை சேர்ந்த உயர்மட்ட குழுவினர் அடங்கிய கூட்டத்தில் நேரடி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்த கூட்டத்தில் மத்திய வெளி விவகார துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கு கொண்டு உள்ளனர்.