என் மலர்

  இந்தியா

  ராகுல் காந்தி வெளிநாடு சென்றதால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி
  X
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

  ராகுல் காந்தி வெளிநாடு சென்றதால் காங்கிரஸ் தலைவர்கள் கடும் அதிருப்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை நடைபெற உள்ளது.
  • கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள "பாரத் ஜோடோ யாத்திரை" தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

  புதுடெல்லி:

  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று ஐரோப்பாவுக்கு புறப்பட்டு சென்றார். வருகிற 17-ந்தேதி அவர் நாடு திரும்புகிறார் என்று கூறப்படுகிறது.

  ஜனாதிபதி தேர்தலில் அவர் ஓட்டு போட திரும்பி வருவார் என்றும், பாராளுமன்ற கூட்டத் தொடரில் அவர் பங்கேற்பார் என்றும் கட்சி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.

  காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நாளை (14-ந்தேதி) நடைபெற உள்ளது. மேலும் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடைபெற உள்ள "பாரத் ஜோடோ யாத்திரை" தொடர்பாகவும் நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

  மேலும் கோவாவில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மாயமாகி திரும்பிய விவகாரத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது.

  இந்த பிரச்சினைகளுக்கிடையே ராகுல்காந்தி வெளிநாடு சென்றிருப்பதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். கட்சியை எப்படி வளர்ப்பது என்றும் அவர்கள் முணுமுணுக்கிறார்கள்.

  கட்சியில் பிரச்சினைகள் இருக்கும் போது ராகுல் காந்தி வெளிநாடுகளுக்கு பயணம் செய்ததை இதுவரை பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் மட்டுமே விமர்சித்து வந்தன. ஆனால் தற்போது சொந்த கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனாலும் அவர் எதற்கும் கவலைப்படாமல் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு வருகிறார்.

  பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்த நிலையில் அவர் கடந்த மே மாதம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இரவு விடுதியில் பொழுதை போக்கியது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தின.

  5 மாநில தேர்தலின் போது மற்ற கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலிக்கு சென்ற ராகுல்காந்தி கடந்த ஜனவரி மாதம் தான் நாடு திரும்பினார்.

  மேலும் கடந்த மே மாதம் மேல்சபை தேர்தலில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அணி மாறி ஓட்டு போட்ட பிரச்சினை இருந்த நிலையில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்-க்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டார். இப்படி காங்கிரஸ் கட்சியில் முக்கிய விவகாரங்கள், பிரச்சினைகள் இருக்கும் போதெல்லாம் அவர் வெளிநாடு செல்வது தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

  Next Story
  ×