என் மலர்
இந்தியா

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் கார்-லாரி நேருக்கு நேர் மோதி விபத்து: 9 பேர் பலி
- விபத்தில், ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.
- சாலை விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மராட்டிய மாநிலம் மும்பை- கோவா நெடுஞ்சாலையில் மும்பை நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. கார் அதிகாலை 5 மணி அளவில் ராய்கட் மாவட்டத்தில் உள்ள ரேபோலி கிராம பகுதியில் வந்தபோது எதிரே வந்த லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் ஒரு பெண் குழந்தை, 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகி உள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று, பலியானவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலையில பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் அதிவேகமாக வந்து லாரி எதிரே வருவதை கவனிக்காமல் இந்த விபத்து நடைபெற்றதா? அல்லது தூக்க கலக்கத்தில் விபத்து நடைபெற்றதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






