என் மலர்

  இந்தியா

  11 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் சரிவு- கொரோனா தினசரி பாதிப்பு 937 ஆக குறைந்தது
  X

  11 நாட்களுக்கு பிறகு ஆயிரத்திற்கும் கீழ் சரிவு- கொரோனா தினசரி பாதிப்பு 937 ஆக குறைந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,252 பேர் நலம் பெற்றுள்ளனர்.
  • இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது.

  புதுடெல்லி:

  இந்தியாவில் கொரோனாவால் புதிதாக 937 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

  கடந்த 26-ந்தேதி பாதிப்பு 830 ஆக இருந்தது. அதன்பிறகு கடந்த 11 நாட்களாக தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டி இருந்தது. நேற்று பாதிப்பு 1,132 ஆக இருந்த நிலையில் 11 நாட்களுக்கு பிறகு தினசரி பாதிப்பு இன்று மீண்டும் ஆயிரத்திற்கும் கீழ் சரிந்துள்ளது.

  மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 61 ஆயிரத்து 516 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பால் நேற்று டெல்லி மற்றும் ஒடிசாவில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட பலிகளில் 7-ஐ கணக்கில் சேர்த்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,509 ஆக உயர்ந்தது.

  கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,252 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 16 ஆயிரத்து 492 ஆக உயர்ந்துள்ளது. தற்போது சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை நேற்றை விட 324 குறைந்துள்ளது. அதாவது 14,515 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

  Next Story
  ×