என் மலர்
இந்தியா

புதிய பாதிப்பு 82-ஆக குறைந்தது: கொரோனாவுக்கு 3 பேர் பலி
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 85 பேர் நலம் பெற்றுள்ளனர்.
- இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 82 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 8-ந்தேதி பாதிப்பு 96-ஆக இருந்தது. அதன்பிறகு 4 நாட்களாக பாதிப்பு 100-ஐ தாண்டிய நிலையில் இன்று மீண்டும் 100-க்கும் கீழ் சரிந்துள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 200-ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 85 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 51 ஆயிரத்து 610 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஆஸ்பத்திரிகளில் 1,837 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்று பாதிப்பால் கடந்த 2 நாட்களாக புதிய உயிரிழப்புகள் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் நேற்று உத்தரபிரதேசத்தில் 2 பேர், மேற்கு வங்கத்தில் ஒருவர் என 3 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,30,753 ஆக உயர்ந்துள்ளது.