என் மலர்

    இந்தியா

    புதிதாக 19,893 பேருக்கு தொற்று- டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது
    X
    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    புதிதாக 19,893 பேருக்கு தொற்று- டெல்லியில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டியது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 ஆக உயர்ந்தது.
    • இதுவரை 4 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்து 29 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று 20,419 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது.

    அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 19,893 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.

    நேற்று முன்தினம் பாதிப்பு 13,734 ஆக இருந்தது. நேற்று 17,135 ஆக உயர்ந்த நிலையில், இன்றும் பாதிப்பு அதிகரித்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக கர்நாடகாவில் 2,136 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 6 மாதத்திற்கு பிறகு தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 2,073 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நாட்டின் மொத்த பாதிப்பு 4 கோடியே 40 லட்சத்து 87 ஆயிரத்து 37 ஆக உயர்ந்தது. இதுவரை 4 கோடியே 34 லட்சத்து 24 ஆயிரத்து 29 பேர் மீண்டுள்ளனர். இதில் நேற்று 20,419 பேர் குணம் அடைந்துள்ளனர்.

    தற்போது 1,36,478 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளனர். இது நேற்றை விட 579 குறைவு ஆகும்.

    தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 53 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,530 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×