search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    நகர்ப்புற மேம்பாட்டுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு- மத்திய மந்திரி தகவல்
    X

    நகர்ப்புற மேம்பாட்டுக்காக கடந்த 9 ஆண்டுகளில் ரூ.18 லட்சம் கோடி முதலீடு- மத்திய மந்திரி தகவல்

    • இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 27 கூடுதல் தரவுத்தொகுப்புகள் ஆகியவை உள்ளன.
    • 77 லட்சம் வீடுகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டுள்ளன."

    புதுடெல்லி:

    இந்தியாவின் நகர அமைப்புகள் தொடர்பான ஆண்டு ஆய்வின் ஆறாவது பதிப்பான ஏ.எஸ்.ஐ.சி.எஸ்-2023 அறிக்கையை மத்திய நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி வெளியிட்டார். இந்த அறிக்கை குறித்து அவர் கூறியதாவது;-

    "இந்த அறிக்கையில் 82 நகராட்சி சட்டங்கள், 44 நகர ஊரமைப்பு சட்டங்கள், 176 தொடர்புடைய சட்டங்கள், விதிகள் மற்றும் அறிவிப்புகள், 32 பிற கொள்கை மற்றும் திட்ட ஆவணங்கள், இந்தியாவில் நகர்ப்புற வளர்ச்சி தொடர்பான 27 கூடுதல் தரவுத்தொகுப்புகள் ஆகியவை உள்ளன.

    நகர்ப்புற மேம்பாட்டுக்காக 2014-ம் ஆண்டு முதல் ரூ.18 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் 1.19 கோடி வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 1.13 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கான பணிகள் தொடங்கப்பட்டு அதில் 77 லட்சம் வீடுகள் பயனாளிளுக்கு வழங்கப்பட்டுள்ளன."

    இவ்வாறு ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×