search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    4 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- ஒருநாள் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    4 மாதங்களில் இல்லாத அளவில் உயர்வு- ஒருநாள் கொரோனா பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது

    • கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 13,029 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 56 ஆக உயர்ந்தது.
    • தற்போது 88,284 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 4,294 அதிகம் ஆகும்.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 13,313 ஆக இருந்த நிலையில், இன்று 17 ஆயிரத்தை தாண்டியது.

    இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    தினசரி பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டுவது கடந்த 124 நாட்களில் முதல் முறை ஆகும்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 5,218 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு பிப்ரவரி 11-ந் தேதிக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை கடந்துள்ளது.

    கேரளாவில் புதிதாக 3,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1,934 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது கடந்த பிப்ரவரி 4-ந் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரு நாள் பாதிப்பில் அதிகம் ஆகும்.

    தமிழ்நாட்டில் புதிதாக 1,063 பேர், அரியானாவில் 872 பேர், கர்நாடகாவில் 858 பேர், மேற்கு வங்கத்தில் 745 பேர், உத்தர பிரதேசத்தில் 634 பேர், தெலுங்கானாவில் 494 பேர், குஜராத்தில் 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது.

    தொற்று பாதிப்பில் இருந்து 13,029 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 56 ஆக உயர்ந்தது.

    தற்போது 88,284 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 4,294 அதிகம் ஆகும்.

    கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 7 மரணங்கள், நேற்று பஞ்சாபில் 2 பேர், மகாராஷ்டிரா, கர்நாடகா, சத்தீஸ்கர் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 13 பேர் தொற்று பாதிப்பால் இறந்துள்ளனர்.

    இதுவரை பலியானோர் எண்ணிக்கை 5,24,954 ஆக உயர்ந்தது.

    நாடு முழுவதும் இதுவரை 196 கோடியே 77 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளது. இதில் நேற்று 13,71,107 டோஸ்கள் அடங்கும்.

    இதற்கிடையே நேற்று 4,01,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.98 கோடியாக உயர்ந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×