என் மலர்

    இந்தியா

    டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து உயர்வு- நாடு முழுவதும் 16,561 பேருக்கு கொரோனா
    X

    டெல்லியில் பாதிப்பு தொடர்ந்து உயர்வு- நாடு முழுவதும் 16,561 பேருக்கு கொரோனா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கொரோனா தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்த 18,053 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர்.
    • இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது.

    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு இன்று சற்று உயர்ந்துள்ளது.

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,561 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    பாதிப்பு கடந்த 9-ந்தேதி 12,751 ஆக இருந்தது. மறுநாள் 10-ந்தேதி 16,047 ஆகவும், நேற்று 16,299 ஆகவும் உயர்ந்தத நிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

    இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,726 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 6 மாதங்களுக்கு பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை கடந்த நிலையில், நாள்தோறும் பாதிப்பு உயர்ந்து வருகிறது.

    நாட்டில் மொத்த பாதிப்பு 4 கோடியே 42 லட்சத்து 23 ஆயிரத்து 557 ஆக உயர்ந்தது.

    தொற்று மீட்பு சிகிச்சையில் இருந்த 18,053 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆகினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 73 ஆயிரத்து 94 ஆக உயர்ந்தது.

    தற்போது 1,23,535 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நேற்றை விட 1,541 குறைவு ஆகும்.

    கொரோனா பாதிப்பால் மேலும் 49 பேர் இறந்துள்ளனர். மொத்தபலி எண்ணிக்கை 5,26,929 ஆக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×