என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

புதிதாக 16,299 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.25 லட்சமாக சரிவு

- கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,431 பேர் மீண்டு வீடு திரும்பினர்.
- இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 41 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது.
அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,299 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
நேற்று பாதிப்பு 16,047 ஆக இருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக டெல்லியில் 2,146, மகாராஷ்டிராவில் 1,847, கர்நாடகாவில் 1,680, கேரளாவில் 1,317, அரியானாவில் 1,145 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.
நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 42 லட்சத்து 6 ஆயிரத்து 996 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 19,431 பேர் மீண்டு வீடு திரும்பினர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 35 லட்சத்து 55 ஆயிரத்து 41 ஆக உயர்ந்தது.
தற்போது 1,25,076 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நேற்றை விட 3,185 குறைவு ஆகும்.
கொரோனா பாதிப்பு காரணமாக மேலும் 53 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 5,26,879ஆக உயர்ந்துள்ளது.