என் மலர்
இந்தியா

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 1,046 ஆக சரிந்தது
- கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,287 பேர் மீண்டுள்ளனர்.
- இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 943 ஆக உயர்ந்தது.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 1,046 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று முன்தினம் பாதிப்பு 1,604ஆக இருந்தது. நேற்று 1,326 ஆக குறைந்த நிலையில் இன்று மேலும் சரிந்துள்ளது.
மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 54 ஆயிரத்து 638 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 1,287 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 7 ஆயிரத்து 943 ஆக உயர்ந்தது. தற்போது 17,618 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பால் நேற்று டெல்லி, அரியானா, கர்நாடகா, ராஜஸ்தானில் தலா ஒருவர் இறந்துள்ளனர். கோவாவில் திருத்தி அமைக்கப்பட்ட பட்டியலில் விடுபட்ட பலி எண்ணிக்கை 46-ஐ கணக்கில் சேர்த்தள்ளனர். இதேபோல கேரளாவில் விடுபட்ட 3 மரணங்கள் என மேலும் 53 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பலி எண்ணிக்கை 5,29,077 ஆக உயர்ந்துள்ளது.