என் மலர்

  அழகுக் குறிப்புகள்

  உடல் உறுப்புகளை அழகாக்கும் அறுவை சிகிச்சை
  X

  உடல் உறுப்புகளை அழகாக்கும் அறுவை சிகிச்சை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பிரபலங்கள் பலரும் உருவக்கேலிக்கு ஆளாகி உள்ளனர்.
  • பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன.

  அழகாக தோற்றமளிக்க விரும்புவது மனித இயல்பு. இதற்காக செலவிடுவதற்கு பலரும் தயாராக உள்ளனர். அதை நம்பியே அழகு சாதன வர்த்தக சந்தை உள்ளது. குறிப்பாக பிரபலங்கள் தங்களை அழகாக காட்டிக்கொள்ள அதிகளவு தொகை யை வேண்டுமானாலும் செலவிட தயாராக இருக்கிறார்கள்.

  பாப் இசை உலகின் அரசன் என்று போற்றப்பட்ட மைக்கேல் ஜாக்சன் பிறந்த போது கருப்பு நிறத்திலேயே அவருடைய தோல் இருந்தது. சில ஆண்டுகள் கழித்து அவருடைய தோல் நிறம் மாறியது. இது குறித்து பல கதைகள் உண்டு. ஆனால் மூக்கின் அமைப்பை மட்டும் அறுவை சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டதாக மைக்கேல் ஜாக்சனே கூறியது குறிப்பிடத்தக்கது.

  இது போல் பிரபலங்கள் பலரும் உருவக்கேலிக்கு ஆளாகி உள்ளனர். இதில் சிலர் தங்களின் உடல் உறுப்புகளை அறுவை சிகிச்சை செய்து அழகாக்கி உள்ளனர். இதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் உள்ளன. இதன் மூலம் உதடு, மூக்கு, மார்பகம் உள்பட உடல் உறுப்புகளை விரும்பும் வகையில் சீர் செய்து கொள்ளலாம்.

  பருமனான உடலில் சேர்ந்த கொழுப்பை உறிஞ்சி எடுப்பது, வயிற்றில் தொங்கும் சதையை நீக்குவது, தீக்காய தழும்பு, ஆறாத புண், கை, கால், கழுத்தில் சுருக்கங்கள் ஆகியவற்றை சீரமைக்கும் சிகிச்சைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகிறார்கள். ஆனால் இது போன்ற உடல் உறுப்புகளை சீரமைக்கும் சிகிச்சை எல்லா உடலுக்கும் ஒத்துக் கொள்ள கூடியதாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

  Next Story
  ×