என் மலர்tooltip icon

    இந்தியா

    சபரிமலையில் நெய் தேங்காய் ஷெட்டில் திடீர் தீ விபத்து- தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பாதிப்பு தவிர்ப்பு
    X

    சபரிமலையில் நெய் தேங்காய் ஷெட்டில் திடீர் தீ விபத்து- தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் பாதிப்பு தவிர்ப்பு

    • தேங்காய்கள் அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு ஷெட்டில் வைக்கப்பட்டிருக்கும்.
    • ஷெட் அருகே இன்னொரு ஷெட்டும் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் இந்த ஷெட் தீயில் இருந்து தப்பியது.

    திருவனந்தபுரம்:

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

    சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். மேலும் கோவிலில் நெய் தேங்காய் அபிஷேகமும் செய்வார்கள்.

    இந்த தேங்காய்கள் அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு ஷெட்டில் வைக்கப்பட்டிருக்கும். பின்னர் அதனை ஒப்பந்தம் எடுத்தவர் அங்கிருந்து எடுத்து செல்வார்.

    இந்த ஷெட் நேற்றிரவு 11.45 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனை கண்ட பக்தர்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

    இந்த ஷெட் அருகே இன்னொரு ஷெட்டும் இருந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் இந்த ஷெட் தீயில் இருந்து தப்பியது.

    இதையடுத்து சபரிமலையில் கூடுதல் கண்காணிப்பை ஏற்படுத்த வேண்டும் என பக்தர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×