என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா (National)
சபரிமலை வரும் பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்-ரெயில்கள்
- கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது தான் மண்டல-மகர பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளது.
- கேரளாவின் அனைத்து பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர்.
இதில் கார்த்திகை மாதம் முதல் தேதியில் இருந்து 60 நாட்கள் கோவில் நடை திறக்கப்பட்டு நடத்தப்படும் மண்டல, மகர விளக்கு பூஜைகள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு நாளை மறுநாள் கார்த்திகை 1-ந் தேதி பிறக்கிறது. அதுமுதல் மண்டல பூஜை தொடங்குகிறது.
இந்த பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நாளை (16-ந் தேதி) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து அவர் தீபாராதனை நடத்தியதும், உப தேவதைகளின் கோவில்களில் விளக்கு ஏற்றப்படும்.
நாளை மறுநாள் காலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து விளக்கில் தீபம் ஏற்றியதும் மண்டல காலம் ஆரம்பமாகிறது. அன்றைய தினம் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்க உள்ளனர்.
சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டன. மேலும் உடனடி தரிசன முன்பதிவிற்கு நிலக்கல் உள்பட 13 இடங்களில் வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.
கொரோனோ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் தற்போது தான் மண்டல-மகர பூஜைகள் விமரிசையாக நடைபெற உள்ளது. எனவே சபரிமலைக்கு இந்த ஆண்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கேரளாவின் அனைத்து பகுதிகள் மற்றும் தமிழகத்தில் இருந்து முதல்கட்டமாக 300-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட உள்ளன. தேவைக்கேற்ப கூடுதல் பஸ்களும் இயக்கப்படும் என்று கேரள அரசு போக்குவரத்துக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் பிஜுபிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதேபோல தமிழகத்தில் இருந்து அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் கூடுதலாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சேலம் என பல பகுதிகளில் இருந்தும் விரைவு போக்குவரத்துக் கழக பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதேபோல் 18 ஜோடி வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில்களை தெற்கு மத்திய ரெயில்வே அறிவித்துள்ளது. ரெயில் எண். 07119 நரசாபூர்-கோட்டயம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் நரசாபூரில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் 18 மற்றும் 25-ந் தேதிகளில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் (2 சேவைகள்) 5.30 மணிக்கு கோட்டயத்தைச் சென்றடையும்.
ரெயில் எண். 07120 கோட்டயம்-நரசாபூர் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் வருகிற 19 மற்றும் 26 தேதிகளில் (சனிக்கிழமைகள்) காலை 9.30 மணிக்கு கோட்டயத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 4 மணிக்கு நரசப்பூரைச் சென்றடையும் (2 சேவைகள்).
ரெயில் எண். 07117 செகந்திராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 20-ந் தேதி மற்றும் டிசம்பர் 04, 18, ஜனவரி 08 ஆகிய தேதிகளில் காலை 6 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் நள்ளிரவு 11 மணிக்கு கொல்லம் சந்திப்பை சென்றடையும்.
ரெயில் எண். 07118 கொல்லம் சந்திப்பு-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லம் சந்திப்பில் இருந்து வருகிற 22-ந் தேதி மற்றும் டிசம்பர் 6, 20, ஜனவரி 10 ஆகிய தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 9.05 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
ரெயில் எண். 07121 செகந்திராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 27, டிசம்பர் 11, 25, ஜனவரி 1 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மதியம் 2.40 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் (23-ந்தேதி) கொல்லம் சந்திப்பை இரவு 11 மணிக்கு சென்றடையும்.
ரெயில் எண். 07122 கொல்லம் சந்திப்பு-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லம் சந்திப்பில் இருந்து வருகிற 29-ந் தேதி மற்றும் டிசம்பர் 13, 27 , ஜனவரி 3 மற்றும் 17 செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, அடுத்த நாள் 10 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
ரெயில் எண். 07123 செகந்திராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில், திங்கட்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 21 மற்றும் 28 அன்று மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் கொல்லம் சந்திப்பை நள்ளிரவு 11.50 மணிக்கு சென்றடையும்.
ரெயில் எண். 07124 கொல்லம் சந்திப்பு-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லம் சந்திப்பில் இருந்து வருகிற 23 மற்றும் 30-ந் தேதிகளில் புதன்கிழமைகளில் மதியம் 2.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் 11 மணிக்கு செகந்திராபாத் சென்றடையும்.
ரெயில் எண். 07125 செகந்திராபாத்-கோட்டயம் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் ஞாயிற்றுக்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து வருகிற 20 மற்றும் 27 அன்று காலை 8.50 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் இரவு 11 மணிக்கு கோட்டயம் சந்திப்பை சென்றடையும். ரெயில் எண். 07126 கோட்டயம்-செகந்திராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் வருகிற 21 மற்றும் 28 திங்கட்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து நள்ளிரவு 11.15 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள், புதன்கிழமை செகந்திராபாத்தை 4 மணிக்கு சென்றடையும்.
ரெயில் எண். 07127 ஐதராபாத்-கொல்லம் சந்திப்பு வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் ஐதராபாத்தில் இருந்து வருகிற 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மதியம் 2 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் கொல்லம் சந்திப்பை மாலை 6 மணிக்கு சென்றடையும்.
ரெயில் எண். 07128 கொல்லம் சந்திப்பு-ஹைதராபாத் வாராந்திர சிறப்புக் கட்டண சிறப்பு ரெயில் கொல்லத்தில் இருந்து வருகிற 16, 23 மற்றும் 30 தேதிகளில் புதன்கிழமைகளில் இரவு 8.45 மணிக்குப் புறப்பட்டு, 3-ம் நாள் மதியம் 01.30 மணிக்கு ஐதராபாத் சென்றடையும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்