என் மலர்
இந்தியா

Spam அழைப்புகள்: 1 வருடத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்களை முடக்கிய TRAI
- இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
- மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும்
கடந்த ஒரு வருடத்தில் மோசடியில்(Spam) ஈடுபட்ட 21 லட்சத்திற்கும் மேற்பட்ட மொபைல் எண்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மோசடி செய்திகளை அனுப்பிய ஒரு லட்சம் நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்த்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.
குடிமக்களிடமிருந்து வந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைப் பற்றி TRAI DND செயலி மூலம் பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டும் என்று TRAI வலியுறுத்தியுள்ளது. இந்தப் பயன்பாடு மூலம் புகார் அளிக்கப்படும்போது, TRAI மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த எண்ணைக் கண்டறிந்து, சரிபார்த்து, நிரந்தரமாகத் துண்டிக்க முடியும் என்று TRAI தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் தொலைத்தொடர்பு தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதில் மக்களின் புகார்கள் மிகவும் முக்கியமானவை என்று தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.






