மேற்கு வங்கத்தில் 28-ந்தேதி வெளியாகிறது இறுதி வாக்காளர்கள் பட்டியல்

நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்பதற்கான பணி நிறைவடைந்துள்ளது.பெரும்பாலானோர் தங்களது விளக்கம் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்கவில்லை.
மேற்கு வங்கத்தில் 28-ந்தேதி வெளியாகிறது இறுதி வாக்காளர்கள் பட்டியல்
Published on

மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 58 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது.

அதன்பின், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆட்சேபனை தெரிவிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும், வாக்காளர் பெயர், முகவரி போன்ற ஆவணங்களில் முரண்டுபாடு இருந்தவர்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.

இந்த நிலையில் SIR பணிக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ளது. உதவி தேர்தல் பதிவு அதிகாரிகள் (AEROs) பதிவேற்றம் செய்யாமல் வைத்துள்ள எந்தவொரு தரவுகளும் திங்கட்கிழமைக்குள் பதிவேற்றம் செய்யப்படும். தேர்வு அதிகாரிகள் பிப்ரவரி 21-ந்தேதி வரை ஆவணங்களை ஆய்வு செய்வார்கள்.

அதன்பின் வருகிற 18-ந்தேதி இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என மூத்த தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com