என் மலர்
இந்தியா

"ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பாலியல் துஷ்பிரயோகம்" - கேரள இளைஞர் மரணத்தில் விசாரணை கோரும் பிரியங்கா காந்தி
- ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
- இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மத்திய ரெயில் நிலையம் அருகே உள்ள ஒரு விடுதியில் கடந்த வியாழக்கிழமை தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர் கோட்டயம் மாவட்டம் எலிகுளம் கிராம பஞ்சாயத்து எல்லைக்குட்பட்ட வஞ்சிமலையைச் சேர்ந்த ஐடி ஊழியர் அனந்து அஜி (26) என்று அடையாளம் காணப்பட்டார். அவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை மாலை அவரது வீட்டில் செய்யப்பட்டன.
இறப்பதற்கு முன்பு அவர் இன்ஸ்டாகிராமில் எழுதிய பதிவு, மாநில அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனந்து அஜித் தனது கடைசி இன்ஸ்டாகிராம் பதிவில், சிறுவயதில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பல உறுப்பினர்களால் நான் மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டேன்.
நான் மட்டும் அல்ல, ஆர்.எஸ்.எஸ். முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகங்கள் நடைபெற்று வருகிறது" என்று குறிப்பிட்டு இதனால் நீண்டகால மன அழுத்தத்திற்கு ஆளாகி அவதிப்பட்டு வந்ததாக அவர் எழுதியிருந்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக வயநாடு காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள பதவில், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரிக்க வேண்டும். தனது தற்கொலைச் செய்தியில், ஆர்.எஸ்.எஸ்ஸின் பல உறுப்பினர்களால் தான் மீண்டும் மீண்டும் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் ஆனந்து அஜி குற்றம் சாட்டியுள்ளார்.
தான் மட்டும் பாதிக்கப்பட்டவர் அல்ல என்றும், ஆர்.எஸ்.எஸ் முகாம்களில் பரவலாக பாலியல் துஷ்பிரயோகம் நடைபெறுகிறது என்றும் அவர் தெளிவாகக் கூறினார். உண்மையாக இருந்தால், இது பயங்கரமானது.
இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான இளம் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் இந்த முகாம்களில் கலந்து கொள்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் வெளிப்படைத்தன்மையை பேண வேண்டும்.
சிறுமிகளுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகம் போலவே, சிறுவர்களுக்கு இழைக்கப்படும் பாலியல் துஷ்பிரயோகமும் சமூகத்தில் பரவியுள்ள பெரும் சாபக்கேடாகும்.
இந்தச் சொல்லப்படாத கொடூரமான குற்றங்களைச் சுற்றியுள்ள மௌனத்தின் திரை கிழிக்கப்பட்டு உண்மை வெளிவர வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.






