search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடியின் மருத்துவ செலவுகளை ஏற்பது யார்? - ஆர்.டி.ஐ விளக்கம்
    X

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் மருத்துவ செலவுகளை ஏற்பது யார்? - ஆர்.டி.ஐ விளக்கம்

    • பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார்.
    • மருத்துவ செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார் என ஆர்.டி.ஐ. தெரிவித்தது.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு மே 26ம் தேதி முதல் பிரதமராக பொறுப்பேற்று வருகிறார். தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து வருகிறார்.

    இதற்கிடையே, பிரதமர் மோடிக்கான மருத்துவ செலவுகள் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்நிலையில், இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டுள்ளார். இதற்காக ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ஆரோக்கியமான இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருகிறார் என தெரிவித்துள்ளார்.

    வரி செலுத்துவோரின் பணம் எதுவும் பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படவில்லை. இது ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×