என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூரின்போது சந்தித்த இழப்பு எவ்வளவு?: நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துங்கள் என காங். வலியுறுத்தல்
    X

    ஆபரேஷன் சிந்தூரின்போது சந்தித்த இழப்பு எவ்வளவு?: நாட்டுக்கு உண்மையை வெளிப்படுத்துங்கள் என காங். வலியுறுத்தல்

    • எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.
    • அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம்- ராணுவ தலைமை தளபதி

    மே 7 முதல் மே 10 வரை பாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததை ராணுவ தளபதி அனில் சவுகான் மறைமுகமாக ஒப்புக்கொண்டுள்ளார். சிங்கப்பூரில் இன்று நடைபெற்ற ஷாங்க்ரி-லா மாநாட்டில் பங்கேற்ற இந்திய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி (CDS) ஜெனரல் அனில் சவுகான், ப்ளூம்பெர்க் டிவிக்கு பேட்டி அளித்தார்.

    பாகிஸ்தானுடனான ராணுவ மோதலில் இந்தியா போர் விமானங்களை இழந்ததா? என்றும், 3 ரஃபேல் உட்பட ஆறு ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியது குறித்தும் அவரிடம் செய்தி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

    இதற்கு அனில் சவுகான் பதிலளித்து பேசுகையில், மே 7 ஆரம்ப கட்ட தாக்குதல்களில் அவற்றை இழந்தோம், ஆனால் எத்தனை போர் விமானங்கள் இழந்தோம் என்பது முக்கியமல்ல, அவற்றை ஏன் இழந்தோம் என்பதுதான் முக்கியம்.

    அவை ஏன் சரிந்தன, என்ன தவறுகள் செய்யப்பட்டன என்பதுதான் முக்கியம். நாங்கள் செய்த தந்திரோபாய தவறை நாங்கள் புரிந்து கொள்ள முடிந்தது, அதை நாங்கள் சரிசெய்தோம், இரண்டு நாட்களுக்குப் பிறகு எங்கள் அனைத்து விமானங்களும் மீண்டும் நீண்ட தூர இலக்குகளைத் தாக்கின" எனத் தெரிவித்திருந்தார்.

    இருப்பினும் பாகிஸ்தான் ஆறு இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்படுவதை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்று அவர் மறுத்தார்.

    இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இழந்தது குறித்து நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கட்சி தலைவர் உத்தம் குமார் ரெட்டி வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக உத்தம் குமார் ரெட்டி கூறியதாவது:-

    அரசு வெளிப்படை தன்மையுடன் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் பொறுப்புக்கூறல் என்பது இயல்பானது. இது தேசப்பற்றை பற்றியது கிடையாது. நாங்கள் மிகவும் அதிகமான தேசப்பற்று கொண்டவர்கள். நமது முதல் குடும்பமான காந்தி குடும்பத்தினர், நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக பெரும் தியாகங்களைச் செய்து, துன்பங்களை அனுபவித்துள்ளனர். இந்த மக்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறார்கள். இது உண்மையிலேயே அதிர்ச்சியூட்டும், வினோதமான விசயம்.

    இவ்வாறு உத்தம் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×