search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவிலில் இன்றும் கட்டுக்கடங்காத கூட்டம்... இதுவரை 22 லட்சம் பேர் தரிசனம்
    X

    அயோத்தி ராமர் கோவிலில் இன்றும் கட்டுக்கடங்காத கூட்டம்... இதுவரை 22 லட்சம் பேர் தரிசனம்

    • அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
    • 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள்

    அயோத்தி:

    உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 22-ந் தேதி ராமர் கோவிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா மிகவும் கோலாகலமாக நடந்தது. பிரதமர் மோடி அதில் கலந்துகொண்டு ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்.

    மறுநாள் 23-ந்தேதி முதல் பாலராமரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அயோத்தி ஆலயத்துக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு ராமர் திரும்பி இருப்பதாக உத்தரபிரதேச மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். எனவே பால ராமரை தரிசிக்க அயோத்தி நோக்கி கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

    முதல் நாளிலேயே 5 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் திரண்டனர். 2-வது, 3-வது நாட்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் அயோத்தி போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த திணறினார்கள்.

    இந்த நிலையில் நேற்று முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அயோத்தியில் பக்தர்கள் கூட்டம் இன்று அதிகரித்தது. இன்று காலை அதிகாலை 3 மணி முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தரிசன நேரம் இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதால் ஏராளமான பக்தர்கள் ராமரை தரிசிக்க முடிகிறது.

    இன்று (சனிக்கிழமை) 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அயோத்தியில் குவிந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 4 நாட்கள் மட்டும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் பாலராமரை தரிசனம் செய்து இருக்கிறார்கள்.

    அடுத்த வாரத்துக்குள் ராமரை தரிசித்த பக்தர்களின் எண்ணிக்கை கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வருகை அதிகரித்து இருப்பதால் அயோத்தி ராமர் கோவிலுக்கு கிடைக்கும் காணிக்கை பணத்தின் அளவும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    Next Story
    ×