என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
சோஷியல் மீடியாவில் மாஸ் காட்டிய ராகுல் காந்தி.. மோடியை பின்தள்ளி அசத்தல்
- எக்ஸ் தளத்தில் மோடியை பின்தொடர்பவர்களின் புதிய எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை.
- எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் அதிகரித்துள்ளது.
புதுடெல்லி:
இன்றைய நவீன யுகத்தில் சமூக வலைதளங்களின் தாக்கம் அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது.
வெறும் பொழுது போக்கு தளமாக மட்டு மல்லாமல் சமூக வலைதளங்களை அரசியல் கட்சியினர் தங்களது பிரசார கருவியாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
பிரதமர் மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களின் பிரசாரம் மற்றும் கட்சி நிகழ்வுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கட்சி தலைவர்களின் வலைதள பக்கங்களை தொண்டர்கள் மட்டு மல்லாது இளைஞர்கள் உள்பட பலதரப்பட்டவர்களும் பின் தொடர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் சமீப காலமாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் சமூக வலைதள பக்கங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவது புள்ளி விபரங்களின் படி தெரியவந்துள்ளது.
நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியின் பிரசாரம், அதற்கு முன்பாக அவர் நாடு முழுவதும் நடத்திய நடைபயணம் ஆகியவற்றுக்கு பொதுமக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பதிவிடப்பட்டன.
அவற்றை பல லட்சக்கணக்கானோர் லைக் செய்த நிலையில் இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம், யூடியூப் ஆகியவற்றில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் மற்றும் இந்த ஆண்டு மே மாதம் வரையிலான கால கட்டத்தில் கணிசமாக அதிகரித்து உள்ளது.
அதே நேரத்தில் இந்த தளங்களில் இதே கால கட்டத்தில் மோடியை பின் தொடர்பவர்களின் சேர்க்கை எண்ணிக்கை ஓரளவு குறைந்திருப்பதும் தரவுகளில் தெரிய வந்துள்ளது.
அதாவது இந்த கால கட்டத்தில் இன்ஸ்டாகிராமில் ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 30 சதவீதம் அதிகரித்தது. அதே நேரத்தில் சமூக வலை தளங்களில் மோடியை புதிதாக பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் மாதத்திற்கு சராசரியாக 5 சதவீதம் குறைந்துள்ளது என்று ஆட்டம் கிரே என்ற டிஜிட்டல் நிறுவன தரவுகளில் தெரியவந்துள்ளது.
எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் மாதத்திற்கு சராசரியாக 61 சதவீதம் என்ற விகிதத்தில் அதிகரித்துள்ளது.
அதே நேரம் எக்ஸ் தளத்தில் மோடியை பின்தொடர்பவர்களின் புதிய எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை. மேலும் யூடியூப்பிலும் ராகுல் காந்தியை புதிதாக பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 12 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதே நேரம் மோடியை பின் தொடர்பவர்களின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 3 சதவீதம் குறைந்து உள்ளது. ஒட்டு மொத்தத்தில் சமூக வலைதளங்களில் மோடியை பின்பற்று பவர்களின் எண்ணிக்கையை விட ராகுல் காந்தியை பின் தொடர்பவர்களின் ஒவ்வொரு வலைதளத்திலும் மிகவும் அதிகமாக உயர்ந்தது.
அதே நேரம் கட்சி அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கங்களை விட பாஜகவின் பக்கங்களை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எக்ஸ் தளத்தில் பாஜகவை 2.2 கோடி பேர் பின் தொடர்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை காங்கிரஸ் கட்சிக்கு 1.6 கோடியாக உள்ளது.
அதன்படி பார்த்தால் காங்கிரஸ் கட்சியை விட எக்ஸ் தளத்தில் பாஜகவை பின் தொடர்பவர்கள் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்