search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    வயநாடு அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம்: வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது- ராகுல்காந்தி
    X

    வயநாடு அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆலோசனை 

    வயநாடு அலுவலகம் தாக்கப்பட்ட விவகாரம்: வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது- ராகுல்காந்தி

    • அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை.
    • அவர்கள் குழந்தைகள், செயலின் விளைவுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    வயநாடு:

    கடந்த மாதம் 24ந் தேதி கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலகத்திற்குள் புகுந்த மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் மாணவர் பிரிவை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் கேரளாவிற்கு இன்று பயணம் மேற்கொண்ட ராகுல்காந்தி, தாக்குதலுக்கு உள்ளான தமது அலுவலகத்தை பார்வையிட்டார். பின்னர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

    இது வயநாட்டு மக்களின் அலுவலகம். நடந்தது துரதிருஷ்டவசமானது. வன்முறை ஒருபோதும் பிரச்சினைகளை தீர்க்காது. இதை செய்தவர்கள் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்டனர். அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் விரோதமும் இல்லை. அவர்கள் குழந்தைகள், செயலின் விளைவுகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ராகுல்காந்தி தமது பேட்டியின்போது, தமது அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் என்றோ, அந்த கட்சியின் மாணவர் அணியினர் என்றோ குறிப்பிடவில்லை, அவர்களை குழந்தைகள் என அழைத்தது குறிப்பிடத்தக்கது. இந்த பேட்டியை தொடர்ந்து தமது ஆதரவாளர்களுடன் ராகுல்காந்தி, சாலை வழியே பேரணியாக சென்றார்.



    Next Story
    ×