என் மலர்tooltip icon

    இந்தியா

    டிரம்ப்-ஐ சந்தித்த நிலையில், பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசிய ரஷிய அதிபர் புதின்..!
    X

    டிரம்ப்-ஐ சந்தித்த நிலையில், பிரதமர் மோடியுடன் டெலிபோனில் பேசிய ரஷிய அதிபர் புதின்..!

    • உக்ரைன்- ரஷியா இடையிலான போரில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து மோடி பேச்சு.
    • போருக்கு அமைதியான தீர்வு காண பிரதமர் அழைப்பு விடுத்தார்.

    உக்ரைன்- ரஷியா இடையிலான போரை நிறுத்துவதற்கு அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதற்கான கடந்த வெள்ளிக்கிழமை அலஸ்காவில் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.

    பின்னர், புதின் சொந்த நாடு திரும்பினார். இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடிக்கு போன் செய்து பேசியுள்ளார்.

    அப்போது இருவரும் இருநாட்டு ஒத்துழைப்பு குறித்து குறித்து ஆலோசனை நடத்தினர். கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் உக்ரைன்- ரஷியா போரில் இந்தியாவின் நிலை என்ன? என்பதை சுட்டிக்காட்டினார். போருக்கு அமைதியான தீர்வு காண பிரதமர் அழைப்பு விடுத்தார். அத்துடன், இந்த விஷயத்தில் இந்தியா தனது முழு ஆதரவையும் வழங்கும் என பிரதமர் மோடி குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ரஷிய அதிபர் புதின் பேசியது என்ன? என்பது குறித்து வெளியிடப்படவில்லை.

    Next Story
    ×