என் மலர்
இந்தியா

பஞ்சாப்: எரிவாயு டேங்கர் வெடித்த விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 7 ஆக உயர்வு
- எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரி மீது மோதியது.
- இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பஞ்சாபில் மாநிலம் ஹோசியார்பூர் மாவட்டம் மண்டியாலாவில் நேற்று இரவு, ஒரு எல்பிஜி எரிவாயு டேங்கர் லாரி மற்றொரு லாரி மீது மோதியது.
இதன் விளைவாக, எரிவாயு டேங்கர் வெடித்து பெரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இன்றுடன் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் காயமடைந்த பதினைந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story






