என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

மத்தியபிரதேசத்தில் இன்று பிரியங்கா தேர்தல் பிரசாரம்

- மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.
- மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
புதுடெல்லி:
மத்திய பிரதேச மாநிலத்துக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜ.க. ஆட்சி நடைபெறும் இந்த மாநிலத்தில் முதல்-மந்திரி முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கும், கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவை போல் மத்திய பிரதேசத்திலும் பா.ஜ.க.வை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு உள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி கடந்த ஜூன் மாதம் ஜபல்பூரில் பேரணி நடத்தி பிரசாரத்தைத் தொடங்கினார். அப்போது பெண்களுக்கு மாதத்திற்கு ரூ.1500 உதவி உட்பட கட்சியின் 5 வாக்குறுதிகளை அறிவித்தார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக சட்ட சபை தேர்தலில் பிரியங்கா காந்தியின் பிரசாரம் மற்றும் காங்கிரசின் வாக்குறுதிகள் காங்கிரஸ் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தது.
கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு அறிவிக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தை மத்தியப் பிரதேசத்துக்குக் கொண்டு சென்றதில் பிரியங்கா காந்தியின் பங்கு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்தியப் பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான், கடந்த மாதம் பிரியங்கா காந்தியின் பேரணிக்கு முன்பு ஜபல்பூரில் புதிய திட்டத்தைத் தொடங்கினார். அதன்படி மாநிலத்தில் தகுதியான பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படும். எதிர்காலத்தில் லட்லி பஹ்னா யோஜனா திட்டத்தின் கீழ் தொகை அதிகரிக்கப்படும் என்று சவுகான் கூறியிருந்தார்.
ஜபல்பூர் பகுதி பழங்குடியினரின் வாக்குகள் அதிகமாக நிறைந்த பகுதி ஆகும். பிரியங்கா காந்தியின் பேரணி அந்த சமூகத்தின் மத்தியில் காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது. இந்த சூழலில் காங்கிரசின் செல்வாக்கை மேலும் அதிகரிக்கும் நோக்கில் பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியாவின் சொந்த ஊரான குவாலியர்-சம்பல் பகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
ஜோதிராதித்ய சிந்தியா, பா.ஜ.க.வுக்குச் செல்வதற்கு முன்பு பிரியங்கா காந்தியுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்தவர். இந்த பகுதியில் காங்கிரசின் செல்வாக்கை பலப்படுத்தவும், பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை தன்பக்கம் ஈர்க்கவும் காங்கிரஸ் முயற்சி செய்து வருகிறது. அதன் முயற்சியாகவே பிரியங்கா காந்தியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தை குவாலியர்-சம்பல் பகுதியில் நடத்துகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
