என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதுகாப்பு துறையில் தனியார் பங்களிப்பு 50% ஆக அதிகரிக்க வேண்டும் - ராஜ்நாத் சிங்
    X

    பாதுகாப்பு துறையில் தனியார் பங்களிப்பு 50% ஆக அதிகரிக்க வேண்டும் - ராஜ்நாத் சிங்

    • மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது.
    • போரின் தன்மை என்பது எல்லைகளைத் தாண்டி தற்போது மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது.

    பாதுகாப்பு தளவாடங்களின் உற்பத்தியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் நிங் வலியுறுத்தியுள்ளார்.

    மகாராஷ்டிராவில் நடைபெற்ற சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆலையில் வெடிபொருள் தயாரிப்புப் பிரிவின் தொடக்க விழாவில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "ராணுவத் தளவாட உற்பத்தி என்பது ஒருகாலத்தில் பொதுத்துறையை மட்டுமே சார்ந்திருந்தது. தற்போது ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் துறை பங்களிப்பை அளிக்கிறது.

    மிகப் பெரிய அளவில் ஆயுதங்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உருவெடுத்து வருகிறது. வெடிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுகிறது. வெடிபொருள் உற்பத்தியில் உலகளாவிய மையமாக இந்தியா உருவெடுக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் இலக்காகும்.

    போரின் தன்மை என்பது எல்லைகளைத் தாண்டி தற்போது மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. எந்த வகையான போராக இருந்தாலும் தனியார் துறையின் வலுவான பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு, உற்பத்தி ஆகியவையே இப்போதைய தேவையாகும்.

    பாதுகாப்புத் துறை உற்பத்தியில் 50% அளவுக்குத் தனியார் துறை பங்களிக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு ரூ.46,000 கோடியாக இருந்த உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தி தற்போது ரூ.1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இதில் தனியார் துறையின் பங்களிப்பு ரூ.30,000 கோடியாகும்.

    பத்து ஆண்டுகளுக்கு முன்பு ரூ.1,000 கோடியாக இருந்த பாதுகாப்பு ஏற்று மதி தற்போது ரூ.25,000 கோடியாக அதிகரித்துள்ளது. இதை வரும் 2029 - 2030ஆம் ஆண்டுக்குள் ரூ.50,000 கோடியாக அதிகரிக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×