search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சலபிரதேச மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
    X

    எய்ம்ஸ் மருத்துவமனை திறப்பு விழாவில் பிரதமர் மோடி 

    இமாச்சலபிரதேச மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

    • பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
    • அனைத்து நவீன வசதிகளை கொண்ட அறுவை சிகிச்சை அரங்குகள் இங்கு உள்ளது.

    பிலாஸ்பூர்:

    இமாச்சல் பிரதேச மாநிலம் பிலாஸ்பூரில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். பிரதமரின் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ், சுமார் 1,470 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தற்போது இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.


    18 சிறப்பு மற்றும் 17 தனிசிறப்பு பிரிவுகள், 64 தீவிர சிகிச்சை பிரிவுகள் என மொத்தம் 750 படுக்கைகள் மற்றும் அனைத்து நவீன வசதிகளையும் உள்ளடக்கிய அறுவை சிகிச்சை அரங்குகள் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. 247 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.


    தொடர்ந்து அங்குள்ள வசதிகள், சிகிச்சை முறைகளை அவர் ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், மத்திய மந்திரி அனுராக் தாக்கூர், பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    Next Story
    ×