என் மலர்
இந்தியா

வளர்ச்சி அடைந்த இந்தியா - 3 ஆயிரம் இளைஞர்களுடன் பிரதமர் மோடி 12-ந்தேதி கலந்துரையாடுகிறார்
- பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்க காட்சிகளை வழங்குவார்கள்.
- தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
புதுடெல்லி:
சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று (9-ந்தேதி) தொடங்கியது. 12-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
12-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத் (வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் அவர் கலந்துரையாட உள்ளார். பிரதமர் அலுவலகம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
விக்சித் பாரத் இளம் தலைவர்கள் கலந்துரையாடல் 2026 பதிப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்கள் பிரதமரிடம் 10 கருப்பொருள் பிரிவுகளில் தங்களின் இறுதி விளக்க காட்சிகளை வழங்குவார்கள்.
அப்போது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கியப் பகுதிகளில் இளைஞர்களின் தலைமையிலான கண்ணோட்டங்களையும் செயல்படுத்தக்கூடிய யோசனைகளையும் அவர்கள் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த நிகழ்ச்சியில், இந்தியாவின் வளர்ச்சி முன்னுரிமைகள் மற்றும் நீண்டகால தேசத்தைக் கட்டியெழுப்பும் இலக்குகள் குறித்து இளைஞர்களால் எழுதப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பையும் அவர் வெளியிட உள்ளார்.






