search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பீகார் சாலை விபத்து - ஜனாதிபதி, பிரதமர், முதல் மந்திரி இரங்கல்
    X

    ஜனாதிபதி திரவுபதி முர்மு

    பீகார் சாலை விபத்து - ஜனாதிபதி, பிரதமர், முதல் மந்திரி இரங்கல்

    • பீகாரில் சாலையோரம் சென்றவர்கள் மீது லாரி மோதிய விபத்தில் 12 பேர் பலியாகினர்.
    • பீகார் விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.

    புதுடெல்லி:

    பீகார் மாநிலத்தின் வைஷாலி மாவட்டத்தில் சாலையோர கோயிலில் பக்தர்கள் கூட்டம் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.

    விசாரணையில், கிராம மக்கள் அப்பகுதி கோவிலில் திரண்டிருந்தபோது ​அதிவேகமாக வந்த லாரி அவர்கள் மீது மோதி விபத்து நிகழ்ந்தது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், பீகார் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, முதல் மந்திரி நிதிஷ்குமார் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் பீகார் மாநிலத்தில் நடந்த சாலை விபத்து வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், பீகார் மாநிலம் வைஷாலியில் நடந்த விபத்து வருத்தம் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இறந்த ஒவ்வொருவரின் உறவினர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பதிவிட்டுள்ளது.

    Next Story
    ×