search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் ஐந்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கியது போக்சோ நீதிமன்றம்
    X

    கேரளாவில் ஐந்து வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை: குற்றவாளிக்கு தூக்குத்தண்டனை வழங்கியது போக்சோ நீதிமன்றம்

    • ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்ட சிறுமி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
    • சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குற்றவாளிகளை கைது செய்தனர்.

    கேரள மாநிலம் ஆலுவா பகுதியில் பீகார் மாநிலத்தில் இருந்து புலம் பெயர்ந்து வந்த தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரது 5 வயது பெண் குழந்தை கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி காணாமால் போனார். இது தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் சிறுமியைத் தேடிவந்த நிலையில், அடுத்த நாள் (ஜூலை 28-ந்தேதி) ஆலுவாவில் உள்ள உள்ளூர் மார்கெட் அருகே சதுப்பு நிலப் பகுதியில் ஒரு சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்டார்.

    அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதன்படி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

    அங்கிருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த அசாஃபக் அலாம் (29) என்பவரைக் கைது செய்த கேரள போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் முடிவில் சிறுமியை வன்கொடுமை செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் அசாஃபக் அலாம்.

    இதனைத்தொடர்ந்து போக்சோ நீதிமன்றம் விசாரணை நடத்தி, கடந்த 4-ந்தேதி அசாஃபக் அலாம் குற்றவாளி என அறிவித்தது. தண்டனை வருகிற 14-ந்தேதி (இன்று) அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி இன்று மரண தண்டனை வழங்கி போக்சோ நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

    இன்று குழந்தைகள் தினம். அதேபோல் போக்சா சட்டம் அறிமுகம் ஆகிய 11-வது ஆண்டாகும். இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த இன்றைய தினத்தில் சிறுமியை கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×