என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி, பிரதமர் ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு
- இங்கிலாந்தின் 57-வது பிரதமராக இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் பொறுப்பேற்றார்.
- இங்கிலாந்து பிரதமராக ரிஷி சுனக் தேர்வானதற்கு உலக் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:
இங்கிலாந்தின் 57-வது பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் மூன்றாம் சார்லஸ் அரசரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிஷி சுனக்கிற்கு உலக தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், இன்று ரிஷி சுனக்கிடம் பேசியதில் மகிழ்ச்சி. இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துகள். எங்களது விரிவான மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என பதிவிட்டுள்ளார்.
Next Story






