என் மலர்
இந்தியா

பாராளுமன்றத்தில் பேசுவதில் இருந்து ஓடும் பிரதமரின் பேட்டி வெற்று வார்த்தைகள்: தெரிக் ஓ'பிரையன் விமர்சனம்
- பிரதமர் மோடி மக்களவையில் பேசுவதை தவிர்த்தார்.
- மோடி உரை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசுவதில் இருந்து ஓடிப் போகிறார். ஆனால், தனியார் செய்தி நிறுவனத்திற்கு (PTI) பேட்டியளிக்கிறார். இந்த பேட்டி வெற்று வார்த்தைகள் என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் தெரிக் ஓ'பிரையன் வெிமர்சனம் செய்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையின் மீதான தீர்மானம் தொடர்பான விவாவதத்தின்போது காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமர் மோடியை தாக்க இருந்ததாக உறுதியான தகவல் கிடைத்தது. இதனால் மக்களவைக்கு வர வேண்டாம் என்று பிரதமர் மோடியிடம் கேட்டுக்கொண்டேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்திருந்தார்.
இதனால் பிரதமர் மோடி விவாதத்தில் கலந்து கொள்ளவில்லை. பிரதமர் உரை இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன.






