என் மலர்tooltip icon

    இந்தியா

    அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு
    X

    அயோத்தி ராமர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு

    • மக்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.
    • ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆனால், கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. தற்போது கோவில் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து 161 அடி உயர் கோவில் கோபுரத்தின் மீது 30 அடி உயர் கம்பத்தில் தர்ம துவஜாரோஹணம் (கொடி ஏற்றுதல்) விழா நடைபெறுகிறது.

    பிரதமர் மோடி கொடி ஏற்றி வைக்கிறார். இதற்காக பிரதமர் மோடி அயோத்தி சென்றுள்ளார். அயோத்தி சென்ற அவர் சாலை மார்க்கமாக ராமர் கோவில் சென்றடைந்தார். அவர் செல்லும் வழியில் இருபுறமும் மக்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்.

    கொடி ஏற்றுதல் விழா காலை 11:52 மணி முதல் பிற்பகல் 12:35 மணி வரை சுப முகூர்த்த நேரத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக அயோத்தி விழா கோலம் பூண்டுள்ளது.

    ராமர் பிறந்த சூரிய குலத்தை குறிக்கும் வகையில் சூரிய சின்னம், மையத்தில் ஓம் மற்றும் மந்தாரை மரம் பொறிக்கப்பட்ட காவிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது.

    அயோத்தி கோவிலுக்கு வந்த பிரதமர் மோடி அங்குள்ள சன்னதிகளில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார்.






    Next Story
    ×