search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும்: பிரதமர் மோடி
    X

    இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும்: பிரதமர் மோடி

    • பிரதமர் மோடி 108-வது மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று பங்கேற்றார்.
    • அப்போது அவர் கூறுகையில், இந்த ஆண்டில் பல துறைகளில் சாதனைகளை படைத்துள்ளோம் என்றார்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி 'மனதின் குரல்' என்ற பெயரில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுடன் தனது கருத்துகளை பகிர்ந்து கொண்டு வருகிறார். நிகழ்ச்சி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாகிறது. கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சி தொடங்கினார். இதன் 100-வது நிகழ்ச்சி கடந்த மாதம் ஒலிபரப்பானது.

    இந்நிலையில், 108வது மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டு மக்கள் அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.

    இந்த ஆண்டில் விண்வெளி, விளையாட்டு என பல துறைகளில் பல்வேறு சாதனைகளை நாம் படைத்திருக்கிறோம்.

    இந்த ஆண்டு நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்தினர். ஆசிய விளையாட்டுப் போட்டியில் 107 பதக்கங்களையும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 111 பதக்கங்களையும் வென்றுள்ளனர். உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தங்களின் செயல்பாடு மூலம் நமது வீரர்கள் நாட்டு மக்களின் மனங்களை வென்றனர்.

    அடுத்து, 2024-ல் பாரிஸ் ஒலிக்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதற்காக, ஒட்டுமொத்த தேசமும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கிறது.

    இந்தியா தன்னம்பிக்கையால் நிரம்பி வழிகிறது. 2024-ம் ஆண்டிலும் அதே உற்சாகத்தையும் வேகத்தையும் நாம் பராமரிக்க வேண்டும். இந்தியாவின் சாதனைகள் அடுத்த ஆண்டிலும் தொடர வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×