search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது - பிரதமர் மோடி
    X

    பிரதமர் மோடி

    குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது - பிரதமர் மோடி

    • குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சி அதிகாரத்தில் உள்ளது.
    • குஜராத் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது என பிரதமர் மோடி பேசினார்.

    அகமதாபாத்:

    குஜராத் சட்டசபைக்கு இரு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. டிசம்பர் 1-ம் தேதி நடக்கும் முதல் கட்ட தேர்தலின்போது 89 தொகுதிகளுக்கும், டிசம்பர் 5-ம் தேதி 2-வது கட்ட தேர்தலின்போது 99 தொகுதிகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தப்படும். டிசம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

    குஜராத் மாநிலத்தில் 1995-ம் ஆண்டு முதல் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பா.ஜ.க. இந்த முறையும் வெற்றியை தக்கவைத்து கொள்ளும் பணிகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைக் கைப்பற்ற போராடுகிறது. கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் இந்த தேர்தலில் புதிதாக போட்டியிடுகிறது. தேர்தலை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர பிரசார வேட்டையில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்நிலையில், குஜராத்தின் மெஹ்சானா நகரில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் கூட்டத்தினரிடையே பேசியதாவது:

    மெஹ்சானாவில் மக்களின் அன்பு நிறைந்த வரவேற்பை பார்த்து செயலற்று போயுள்ளேன். குஜராத்தில் பா.ஜ.க. வெற்றி பெற தயாராகி வருகிறது.

    கடந்த 20 ஆண்டுகளில் குஜராத் பெருமளவு மாறியுள்ளது. குஜராத் மாநிலம் சந்தித்த பஞ்சம் பற்றி இன்றைய தலைமுறையினருக்கு தெரியாது. அதனை அவர்கள் பார்த்தது இல்லை. அவர்களின் முந்தின தலைமுறை இன்று காணப்படும் குஜராத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர்.

    காங்கிரஸ் கட்சி குஜராத் மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டையும் அழித்துவிட்டது. காங்கிரசானது, குடும்ப அரசியல், சாதிய அடிப்படையிலான, மதவெறி சார்ந்த மற்றும் ஓட்டு வங்கிக்கான அரசியல் நடத்தும் மாதிரியை கொண்டுள்ளது என தெரிவித்தார்.

    Next Story
    ×