என் மலர்tooltip icon

    இந்தியா

    ஒரே நாடு, ஒரே நேரம்: வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு
    X

    ஒரே நாடு, ஒரே நேரம்: வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு

    • இந்தியா முழுவதும் ஒரே நேரத்தை பின்பற்றுவதற்காக ஒரே நாடு ஒரே நேரம் வரைவு விதிகள் வெளியிடப்பட்டது.
    • இந்த வரைவு விதிகள் குறித்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்

    நாடு முழுவதும் Indian Standard Time (IST) நேரத்தை கட்டாயமாக்கி மத்திய அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது.

    தொலைத்தொடர்பு, வங்கி, பாதுகாப்பு, 5ஜி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என இந்திய நாட்டின் உள்கட்டமைப்பில் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் ஒரே நேரத்தை பின்பற்றுவதை உறுதிப்படுத்துவதற்காக இந்த வரைவு விதிகள் வெளியிடப்பட்டது.

    இந்த வரைவு விதிகள் குறித்து பிப்ரவரி 14-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

    இந்த புதிய வரைவு விதிகள் அதிகாரபூர்வ, வர்த்தக, நிதி, நிர்வாகம், சட்ட ஒப்பந்தங்கள் என அனைத்து விதமான பயன்பாடுகளிலும் Indian Standard Time -யை மட்டுமே பின்பற்ற வலியுறுத்துகிறது. Indian Standard Time -யை தவிர பிற நேர திட்டங்களைப் பின்பற்றுவதற்கு இந்த விதிகளின்கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    அறிவியல் ஆய்வு, வானியல், கடற்பயணம் உள்பட குறிப்பிட்ட சில துறைகளுக்கு மட்டும் அரசின் முன் அனுமதியுடன் இந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×