என் மலர்
இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து லைவ் அப்டேட்ஸ்
- இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
- சேதமடைந்த தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டுள்ளன.
ஷாலிமரில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், பெங்களூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் ஆகியவை ஒடிசாவின் பாலசோர் அருகே மோதி விபத்து பயங்கர ஏற்பட்டது. மெயின் லைனில் வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், சரக்கு ரெயில் நிறுத்தப்பட்டிருந்த லூப் லைனில் வந்ததே ஒட்டுமொத்த விபத்துக்கும் காரணமாக அமைந்துவிட்டது. இன்டர்லாக்கிங் சிஸ்டத்தில் ஏற்பட்ட மாற்றம் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது-
விபத்து நடந்த இடத்தில் தண்டவாளங்களின் குறுக்கே கிடந்த ரெயில் பெட்டிகள் அகற்றப்பட்டன. சேதமடைந்த தண்டவாளங்களும் சரி செய்யப்பட்டுள்ளன.
Live Updates
- 3 Jun 2023 7:12 AM IST
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு அறைக்கு செல்கிறார் முதல்வர் முக ஸ்டாலின். காலை 8.15 மணிக்கு கட்டுப்பாட்டு அறையில் முக ஸ்டாலின் ஆய்வு.
- 3 Jun 2023 6:58 AM IST
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 100-வது பிறந்த நாளை ஒட்டி, இன்று மாலை சென்னையில் நடைபெற இருந்த கருணாநிதி பிறந்தநாள் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்படுகிறது.
கருணாநிதி நினைவிடம் மற்றும் ஓமந்தூராரில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு மட்டும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- 3 Jun 2023 6:54 AM IST
ஒடிசா ரெயில் விபத்தில் 233 பேர் பலியான நிலையில், ரெயிலின் முதல் இரண்டு பெட்டிகளில் பயணம் செய்த யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று தகவல்.






