என் மலர்
இந்தியா

ஒடிசா ரெயில் விபத்து- மீட்பு பணிகள் சவாலாக உள்ளது - தலைமை செயலாளர் விளக்கம்!
- நாட்டையே உலுக்கிய ரெயில் விபத்தின் தற்போதைய நிலை குறித்து தலைமை செயலர் விளக்கம்.
- விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட ரெயில் விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீட்பு பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஒடிசா தலைமை செயலாளர் ஜெனா பேட்டியளித்தார். அதில் அவர் கூறியதாவது..,
"ரெயில் விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்று வருகிறது. மீட்பு பணிகளை மேற்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. ரயில் விபத்தில் காயம் அடைந்த பயணிகளிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது."
"விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் விபத்தில் இறந்தவர்கள் உடல்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது," என்று தெரிவித்தார்.






