search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது: சலசலப்பிற்கு மத்தியில் ஷிண்டேவுக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு
    X

    எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது: சலசலப்பிற்கு மத்தியில் ஷிண்டேவுக்கு கட்சி தலைவர்கள் ஆதரவு

    • அஜித் பவாரை அரசில் இணைத்துக் கொண்டதால் ஷிண்டே கட்சி எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தி
    • ஏக்நாத் ஷிண்டேதான் தொடர்ந்து முதல்வராக இருப்பார் அக்கட்சி தலைவர்கள் உறுதி

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ம் ஆண்டும் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், ஸ்திரதன்மையற்ற நிலை இருந்து கொண்டே வருகிறது.

    முதலில் பா.ஜனதா, அஜித் பவார் ஆதரவுடன் ஆட்சியமைத்தார். அது உடனடியாக முடிவுக்கு வந்தது. அதன்பின் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசோன கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைத்தன.

    திடீரென கடந்த வரும் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியில் இருந்து பிரிந்து பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று அஜித் பவார் அமைச்சரவையில் இணைந்துள்ளார். அவருடன் மேலும் 8 எம்.எல்.ஏ.-க்கள் அமைச்சராக பதவி ஏற்றுள்ளனர்.

    தேசியவாத காங்கிரஸ் கட்சி யாருக்கு சொந்தம் என்பதில் சரத் பவார்- அஜித் பவார் இடையே போட்டி இருந்து வரும் நிலையில், தேசியவாத காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி அமைக்கலாம் என ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.-க்கள் கொடி பிடித்தனர்.

    பால் தாக்கரே சித்தாந்தம் வேறு. தேசியவாத காங்கிரஸ் சித்தாந்ததம் வேறு. ஒருபோதும் தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து செல்ல வேண்டும் என பால் தாக்கரே நினைத்தது கிடையாது. அப்படி இருக்கும்போது அவரது கட்சியான சிவசேனா எப்படி அஜித் பவார் உடன் இணைந்து செயலாற்ற முடியும்? என்ற கேள்வியை எழுப்பினர்.

    இதற்கிடையே ஒருநாள் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருப்பதாக அஜித் பவார் கூறியிருந்தார். மேலும், அஜித் பவார் கட்சி எம.எல்.ஏ.-க்களுக்கு மந்திரி பதவி கொடுக்கும் நிலையில், தங்களது நிலை என்னவாகும் என்பதாலும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் ஷிண்டேவுக்கு நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக நேற்று அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக இருக்க ஆதரவு தெரிவித்தனர்.

    மகாராஷ்டிர மாநில மந்திரி ஷம்புராஜ் தேசாய் ''முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ராஜினாமா செய்வார் என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களுக்கு 200-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது.




    எல்லோரும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம். ஏக்நாத் ஷிண்டேயின் தலைமை மீது நம்பிக்கை வைத்துள்ளோம்'' என்றார்.

    மற்றொரு மந்திரி உதய் சமந்த் ''வர்ஷா பங்களாவில் ஏக்நாத் ஷிண்டே உடன் சிவசேனா தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையின் கீழ் மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டசபை கூட்டம், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி.க்கள் எதிர்காலத்தில் செய்ய வேண்டியது, எப்படி பணிகளை முடிக்கி விடுவது, அமைப்புகளை எப்படி வளர்ப்பது குறித்து ஆலோசனை செய்யப்படடது.

    யார் வருகையாலும் (அஜித் பவார் குரூப் வருகை) சிவசேனா கட்சி எம்.எல்.ஏ.க்கள் யாரும் மகிழ்ச்சியில்லாமல் இல்லை. ஏக்நாத் ஷிண்டே மீது நம்பிக்கை வைத்துள்ளோம். ஏக்நாத் ஷிண்டே ராஜினிமா என்ற செய்து வதந்திகள். எம்.எல்.ஏ.- எம்.பி. தேர்தலை ஷிண்டே தலைமையின் கீழ் எதிர்கொள்வோம்'' என்றார்.

    மகாராஷ்டிர மாநில பா.ஜனதா தலைவர் சந்திரசேகர் பவன்குலே ''ஏக்நாத் ஷிண்டேயின் முதல்வர் பதவி குறித்து எதிர்க்கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.


    ஆனால், ஏக்நாத் ஷிண்டே தொடர்ந்து முதல்வராக செயல்படுவார். அவர் சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறார்'' என்றார்.

    Next Story
    ×