என் மலர்
இந்தியா

வேலை நேரத்திற்கு பிறகு அலுவலக அழைப்புகளுக்கும், மின்னஞ்சல்களுக்கும் பதிலளிக்க தேவையில்லை - மசோதா அறிமுகம்
- மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிமுகப்படுத்தினார்.
- மரண தண்டனையை ஒழிப்பதற்கான மசோதாவை திமுக எம்.பி கனிமொழி அறிமுகப்படுத்தினார்.
அலுவலக நேரத்திற்கு பிறகு வேலை தொடர்பான செல்போன் அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதை ஊழியர்கள் தவிர்க்க அனுமதிக்கும் ஒரு தனி நபர் மசோதா மக்களவையில் அறிமுகமாகி உள்ளது.
தேசியவாத காங்கிரஸ் எம்.பி.சுப்ரியா சுலே வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்திய இந்த 'துண்டிப்பு உரிமை மசோதா, 2025', பணியாளர் நல ஆணையத்தை நிறுவுவதையும், ஒவ்வொரு பணியாளருக்கும் அலுவலக நேரத்திற்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் வேலை தொடர்பான அழைப்புகளை துண்டிக்கவும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காமல் இருக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது.
அதேபோல் காங்கிரஸ் எம்.பி. கே. காவ்யா, மாதவிடாய் காலத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு வசதிகள் மற்றும் ஆதரவை வழங்குவதை உறுதி செய்யும் சட்ட கட்டமைப்பை நிறுவுவதற்கு அழைப்பு விடுக்கும் மற்றொரு தனிநபர் மசோதாவை அறிமுகம் செய்தார்.
மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கும் மசோதாவை காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிமுகப்படுத்தினார்.
இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பதற்கான மசோதாவை திமுக எம்.பி கனிமொழி அறிமுகப்படுத்தினார்.






