என் மலர்
இந்தியா

என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்: தேஜஸ்வி யாதவ் சொல்கிறார்
- தேர்தலுக்குப் பிறகுதான் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார்.
- எனக்கு வாய்ப்பு கொடுங்கள், என்டிஏ-வால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன்.
பீகார் மாநிலத்தில் நவம்பர் மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஐக்கிய ஜனதா தளம்- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், ராஷ்டிரிய ஜனதா தளம்- காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் இடையில் நேரடி போட்டி நிலவியுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால் நிதிஷ் குமார்தான் முதல்வராக பதவி ஏற்க வாய்ப்புள்ளது. ஆனால், முதல்வர் வேட்பாளர் அவர்தான் என என்.டி.ஏ. கூட்டணி வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை.
இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவும்தான் முதல்வர் வேட்பாளர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரு கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.
தேஜஸ்வி யாதவ் சஹர்சா மாவட்டத்தில் உளள் சிம்ரி பக்தியார்பூரில் நடைபெற்ற பேரணியில் கலந்த கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.-க்களால் முதலமைச்சர் தேர்வு செய்யப்படுவார் என அமித் ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார். இதனால் என்.டி.ஏ.-வுக்கு மக்கள் வாக்களித்து மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமார் முதல்வராக மாட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 11 வருடங்களாகவும், 20 வருடங்கள் மாநிலத்திலும் ஆட்சி செய்த போதிலும், பீகார் மாநிலம் ஏழ்மையாகவும், வேலைவாய்ப்பின்மையாகவும், ஊழலாகவும், கிரிமிகல் செயல்பாடு உள்ள மாநிலமாகவும் இருப்பது ஒரு பீகாரியாக எனக்கு மதவேதனையாக உள்ளது.
மோடிக்கு லால பயப்படவில்லை. அதேபோல் அவர் மகனுமான நானும் மோடிக்கு பயப்படமாட்டேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள், தேசிய ஜனநாயக கூட்டணியால் 20 வருடங்கள் செய்ய முடியாததை, நான் 20 மாதங்களில் செய்வேன்.
இவ்வாறு தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார்.






