search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார்
    X

    பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்டார் நிதிஷ் குமார்

    • பீகாரில் கருத்தரிப்பு சதவீதம் குறைவு குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கருத்து
    • நிதிஷ் குமார் கருத்து மிகவும் இழிவானது என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபையில் நேற்று விவாதம் நடைபெற்றது. அப்போது பெண்கள் கருத்தரிப்பு வீதம் 4.2-ல் இருந்து 2.9 ஆக குறைந்தது தொடர்பாக முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவிக்கையில் "மக்கள் தொகை கட்டுப்பாட்டில் பெண்கள் கல்வியின் பங்கு" குறித்து பேசினார்.

    இதுகுறித்து பா.ஜனதா கூறும்போது, "சட்டசபையில் நிதிஷ்குமார் பயன்படுத்திய வார்த்தைகள் மிகவும் புண்படுத்தும் அவமரியாதை, பாலியல், ஆணாதிக்க மனநிலையை பிரதிபலிக்கிறது. அவர் பதவி விலக வேண்டும்" என்று தெரிவித்தது.

    தேசிய மகளிர் ஆணையம் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியது.

    இது தொடர்பாக எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் நிதிஷ் குமார் மன்னிப்பு கேட்டுள்ளார். அவர் இதுகுறித்து கூறுகையில் "நான் கூறிய வார்த்தை பெண்களை அவமரியாதை செய்யும் அர்த்தம் அல்லை. அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×