என் மலர்
இந்தியா

பல்வேறு தேர்தல் வெற்றிகளால் திருப்தி அடைந்து விடக்கூடாது: என்.டி.ஏ. எம்.பி.க்களிடம் கூறிய பிரதமர் மோடி
- உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றுள்ளது.
- இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை.
தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) நாடாளுமன்ற கட்சி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. அப்போது பிரதமர் மோடி "உள்ளாட்சி தேர்தல் உள்பட பல்வேறு தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றிகள் மக்கள் நலன் கொள்கைகள் மற்றும் கடின உழைப்பால் கிடைத்தவை. இந்த வெற்றிகளால் என்.டி.ஏ. திருப்தியடைந்து விடக் கூடாது. சிறந்த பணிகளை தொடர வேண்டும்" என்று கூறியதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் 39 நாடுகளுடன் வெற்றிகரமாக வர்த்தக ஒப்பந்தம் செய்ததாக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
Next Story






