search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.கவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்- நளின்குமார் கட்டீல்
    X

    கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.கவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர்- நளின்குமார் கட்டீல்

    • பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
    • பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

    மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.

    தேர்தலில் பதிவான வாக்குகள் மே 13ம் தேதி எண்ணப்பட்டு, அன்று மாலையே அங்கு ஆட்சி அமைக்கப்போவது யார் என்று அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியைத் தக்கவைக்க பா.ஜ.க.வும், இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரசும் தீவிர முனைப்போடு செயல்பட்டு வருகின்றன.

    இதற்கிடையே, கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி கட்சி தாவல்கள் நடைபெற்று வருகின்றன. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜ.கவில் இணையும் நிகழ்ச்சி பெங்களூரு மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

    கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல் முன்னிலையில் பிற கட்சியினர் காங்கிரசில் இணைந்தனர்.

    இதில் நளின்குமார் கட்டீல் பேசியதாவது:-

    இன்று (நேற்று) முன்னாள் எம்.எல்.ஏ. நந்திஹள்ளி ஹாலப்பா, ஒக்கலிகர் சங்க முன்னாள் தலைவர் அப்பாஜி கவுடா போன்றவர்கள் பா.ஜ.கவில் சேர்ந்துள்ளதால் எங்கள் கட்சிக்கு கூடுதல் பலம் கிடைத்துள்ளது.

    பா.ஜ.கவின் கொள்கை- கோட்பாடுகளை ஏற்று ஆயிரக்கணக்கான பிற கட்சியினர் பா.ஜ.கவுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    பிரதமர் மோடியின் தலைமையை அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்கிறார்கள். பா.ஜ.க தான் நம்பிக்கையான கட்சி என்று மக்கள் கருதுகிறார்கள்.

    அவரவர் தகுதிக்கு ஏற்ப கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். அனைவரும் கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக உழைக்க வேண்டும். கர்நாடகத்தில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமைவது உறுதி.

    பா.ஜ.கவை ஆதரிக்க மக்கள் முடிவு செய்துவிட்டனர். நாங்கள் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

    இவ்வாறு நளின்குமார் கட்டீல் பேசினார்.

    Next Story
    ×