என் மலர்

  இந்தியா

  நிர்வாணமாக போட்டோ ஷூட்- ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு
  X

  ரன்வீர் சிங்

  நிர்வாணமாக போட்டோ ஷூட்- ரன்வீர் சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர் மீது புகார்.
  • ரன்வீர் மும்பை திரும்பியவுடன் நேரில் ஆஜராகும்படி சம்மன்.

  பாலிவுட் பட உலகின் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் ரன்வீர் சிங், பிரபல இந்தி நடிகை தீபிகா படுகோனேவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அண்மையில், ரன்வீர் சிங் பேப்பர் பததிரிக்கைக்காக உடம்பில் ஒட்டு துணி இல்லாமல் நிர்வாணமாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்தார்.

  அவரது நிர்வாணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்புகளும் கிளம்பின. ரன்வீர் சிங் மீது நடவடிக்கை எடுக்கும்படி தொண்டு நிறுவனம் அளித்த புகாரின் பேரில், மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  ரன்வீர் சிங் மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 509, 292 மற்றும் 294 மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 ஏ ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டதாக கூறி ரன்வீர்சிங்கிற்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை முடிவு செய்துள்ளது.

  தற்போது ரன்வீர்சிங் படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றுள்ளார். அதனால் அவருக்கு இன்னுன் சம்மன் அனுப்பப்பட வில்லை. அவர் மும்பை திரும்பியவுடன் ஆகஸ்ட் 22 ஆம் தேதி மும்பை காவல்துறை முன்பு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

  Next Story
  ×