என் மலர்
இந்தியா

பல் வலிக்கு மருந்து கேட்ட பெண்: சல்பாஸ் மாத்திரை கொடுத்ததால் உயிர் பறிபோன சோகம்..!
- பல் வலி நிவாரணத்திற்கு மாத்திரை வாங்க சென்ற பெண்ணுக்கு சல்பாஸ் மாத்திரை கொடுத்த விற்பனையாளர்.
- உடல்நிலை மோசமானதால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழப்பு.
மத்திய பிரதேச மாநிலத்தில் 32 வயது பெண் ஒருவருக்கு மெடிக்கல் ஸ்டாஃப் மாத்திரை மாற்றி கொடுத்ததால், பெண் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் போபாலில் இருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது தரம்பூரி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா (வயது 32). இவர் பல் வலியால் துடித்துள்ளார். இதனால் வலி நிவாரண மாத்திரை வாங்குவதற்காக ஜாபுவா மாவட்டத்தில் உள்ள மெடிக்கலுக்கு சென்றுள்ளார்.
மெடிக்கல் ஸ்டாஃபிடம் பல் வலியாக உள்ளது. வலி நிவாரண மருந்து (painkiller) வேண்டும் எனக் கேட்டுள்ளாளர். ஆனால் மெடிக்கல் ஸ்டாஃப் சல்பாஸ் மாத்திரை (sulphas tablet) வழங்கியுள்ளார். ரேகாவும் பல் வலிக்கான நிவாரண மாத்திரை என நினைத்து உட்கொண்டுள்ளார்.
இதனால் ரேகாவின் உடல்நிலை மிகவும் மோசடைந்துள்ளது. அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவமனைக்கு செல்வதற்குள் உயிர் பிரிந்துள்ளது. இது தொடர்பாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உடற்கூறு பரிசோதனையில் சல்பாஸ் மாத்திரை உட்கொண்டதால் உயிர் பிரிந்தது எனத் தெரியவந்தது. இதனால் மெடிக்கல் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ளனர். மெடிக்கலில் விற்பனையாளராக இருந்தவரை போலீசார் தேடிவருகின்றனர்.






