என் மலர்
இந்தியா
மொரோக்கோ நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல்
- நிலநடுக்கத்தில் 296 பேர் உயிரிழப்பு எனத் தகவல்
- இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவெல்லாம் மொரோக்கோ மக்களுடன் இருக்கிறது
வடஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், உள்ளூர் நேரப்படி நேற்றிரவு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 296 பேர் உயிரிழந்ததாக, அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளது. மீட்புப் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்திய பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ''மொரோக்கோவில் நடைபெற்ற நிலநடுக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.
இந்த சோகமான நேரத்தில், என்னுடைய நினைவெல்லாம் மொரோக்கோ மக்களுடன் இருக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில், உதவுவதற்கு இந்தியா எல்லா வகையிலும் தயாராக இருக்கிறது'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
Next Story






