என் மலர்tooltip icon

    இந்தியா

    ஐரோப்பா அல்லது அமெரிக்காவை விட இந்தியா அதிக ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கிறது- பிரதமர் மோடி பெருமிதம்
    X

    ஐரோப்பா அல்லது அமெரிக்காவை விட இந்தியா அதிக ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கிறது- பிரதமர் மோடி பெருமிதம்

    • வரும் நாட்களில், வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும்.
    • இந்தியா போக்குவரத்து வசதிகளை நவீனமயமாக்குவது மட்டுமல்லாமல், தற்சார்பு நிலையை நோக்கியும் செல்கிறது.

    பிரதமர் மோடி இன்று மேங்கு வங்க மாநிலம் மால்டாவில் ரெயில் சேவை மற்றும பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் உள்பட 6 ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார்.

    இந்த விழாவின்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    * புதிய அம்ரித் பாரத் ரெயில்கள், வடக்கு மற்றும் தென்னிந்தியாவிற்கான வங்காளத்தின் இணைப்பை மேலும் வலுப்படுத்தும்

    * வரும் நாட்களில், வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும்.

    * ஐரோப்பா அல்லது அமெரிக்காவை விட இந்தியா அதிக ரெயில் பெட்டிகளைத் தயாரிக்கிறது. இது நமது பொருளாதாரத்தை மேம்படுத்துகிறது

    * இந்தியா போக்குவரத்து வசதிகளை நவீனமயமாக்குவது மட்டுமல்லாமல், தற்சார்பு நிலையை நோக்கியும் செல்கிறது.

    * ஹவுரா மற்றும் கவுஹாத்தி இடையே இயக்கப்படும் புதிய வந்தே பாரத் படுக்கை வசதி ரெயில், மா காளி மற்றும் மா கமாக்யாவின் புனிதத் தலங்களை இணைக்கும்

    * வெளியிடப்பட்ட திட்டங்கள், குறிப்பாக புதிய ரெயில்கள், இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும்.

    Next Story
    ×