என் மலர்tooltip icon

    இந்தியா

    மம்தா பானர்ஜி அரசுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு
    X

    மம்தா பானர்ஜி அரசுக்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி பேச்சு

    • TMC தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களைத் தாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
    • திரிணாமுல் காங்கிரசின் ரவுடித்தன நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன.

    கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசினார். அப்போது வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணியை எதிர்த்து, ஊடுருவல்காரர்களுக்கு அரணாக திரிணாமுல் காங்கிரஸ் செயல்படுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது என்றும் கூறினார்.

    இது தொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியலில் இருந்து ஊடுருவல்காரர்கள் பெயர்களை நீக்கும் வரை, வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்த முடியாது. ஏற்கனவே இறந்தவர்கள் பெயர்களை கூட நீக்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கட்டுப்படுத்தப்படாத ஊடுருவலின் காரணமாக, வங்காளத்தின் பல பகுதிகளில் மக்கள் தொகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அந்த இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் வேண்டுமென்றே இந்துக்களை மைனாரிட்டியாக்கி வருகிறது.

    துன்புறுத்தப்படும் இந்து அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும்போது, அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஏனென்றால், அவர்களை திரிணாமுல் காங்கிரஸ் அதனுடைய வாக்கு வங்கியாக பரிசீலனை செய்யவில்லை.

    திரிணாமுல் காங்கிரஸ் அரசு ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளின் ஆதரவுடன் இயங்குகிறது. மிரட்டி பணம் பறித்தல் போன்றவை அவர்களின் வருமான ஆதாரங்கள். இத்தகைய கும்பல்களை வலுப்படுத்த, அவர்கள் ஊடுருவல்காரர்களைக் கொண்டு வருகிறார்கள். இந்த ஊடுருவலின் காரணமாக, வங்காளத்தின் வாழ்வாதாரம், பெண்கள் மற்றும் நிலம் ஆகியவை அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன.

    திரிணாமுல் காங்கிரஸ் தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு நிறுவனங்களைத் தாக்குவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. இது வெட்கக்கேடானது.

    திரிணாமுல் காங்கிரஸ்க்கு நான் ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். அதன் ரவுடித்தன நாட்கள் முடிவுக்கு வந்து கொண்டிருக்கின்றன. அதற்கான கவுன்டவுன் தொடங்கி விட்டது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    Next Story
    ×