search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    சொத்து குவிப்பு வழக்குக்கு எதிராக அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்
    X

    சொத்து குவிப்பு வழக்குக்கு எதிராக அமைச்சர் பொன்முடி சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல்

    • சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த நிர்வாக உத்தரவின்படி இந்த வழக்கு வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
    • எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி தான் இந்த வழக்கையும் விசாரிப்பார்.

    புதுடெல்லி:

    அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி மற்றும் நண்பர் மீது அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கை விழுப்புரம் கோர்ட்டு முதலில் விசாரித்தது. பின்னர் சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த நிர்வாக உத்தரவின்படி இந்த வழக்கு வேலூர் மாவட்ட கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.

    இந்த வழக்கை விசாரித்த வேலூர் சிறப்பு கோர்ட்டு நீதிபதி, பொன்முடி உள்ளிட்டோரை விடுதலை செய்து கடந்த ஜூன் மாதம் தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்யவில்லை. இதையடுத்து, இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.

    இந்த வழக்கிற்கு பதில் அளிக்கும்படி பொன்முடி உள்ளிட்டோருக்கு நோட்டீசும் அனுப்பினார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தபோது, வழக்கை வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று பொன்முடி தலைப்பில் வாதிடப்பட்டது. அதேபோல லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரும் இதே கோரிக்கையை முன்வைத்து வாதிட்டனர்.

    ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் நிராகரித்துவிட்டார். எம்.பி.-எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி தான் இந்த வழக்கையும் விசாரிப்பார். அந்த வகையில் நான் இந்த வழக்கை விசாரிப்பேன் என்றும் அவர் உத்தரவிட்டார்.

    இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பொன்முடி இன்று அப்பீல் செய்துள்ளார். இந்த அப்பீல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

    Next Story
    ×